2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலவச கண் பரிசோதனை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ்ப்பாணம்,  சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 55 வயதுக்கும்  மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,  மூக்குக்கண்ணாடிகளும்  வழங்கும் நடவடிக்கை வலி. தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி  நடைபெறவுள்ளதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி கே.ரஐPவ் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த இலவச மருத்துவ முகாமில், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  150 முதியவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்  கூறினார்.

மேலும், கண் சத்திரசிகிச்சை செய்யவேண்டிய தேவை ஏற்படுபவர்களுக்கு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்வதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்.  இதேவேளை, கண் வில்லைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .