2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சுகாதாரமற்ற உணவகங்கள், வெதுப்பகங்களுக்கு எதிராக வழக்கு

George   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 14 உணவகங்கள் மற்றும் 2 வெதுப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தனர்.

சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின், மேற்பார்வையின் கீழ், சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கடந்த வாரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையிலேயே இந்த உணவகங்களும், வெதுப்பகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த உணவகங்களில், உடல் நலத்துக்கு ஒவ்வாத முறையில் உணவு தயாரிக்கப்ட்டுள்ளதுடன் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலங்கி அணியாமல் வெதுப்பக உணவுகள் தயாரித்தமை மற்றும் பணியாற்றுபவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள் இல்லாமை போன்ற குற்றங்களுக்காக 2 வெதுப்பகங்களும் பிடிக்கப்பட்டன.

உணவகங்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் எதிர்வரும் 17 மற்றும் 28 ஆகிய தினங்களில் முறையே மல்லாகம் நீதவான் நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பணிமனையினர் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .