2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உபகடன் உருவாக்கல் வேலைத்திட்டம்

George   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகடன் உருவாக்கல் வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் நீர்வேலி தெற்கு மாதர் கிராமிய அபிவிருத்தி சங்க மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(09) இடம்பெற்றது.

இது தொடர்பில் தேசிய இளைஞர் சேவை கூட்டுறவு சங்க மாவட்ட பொது முகாமையாளர் செ.கோகுலராஜா கருத்து தெரிவிக்கையில்,

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் சுயதொழில் பயிற்சியை கற்றவர்களிடமிருந்து சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகடன் உருவாக்கல் வேலைத்திட்டத்திற்கு இளைஞர் சேவை மன்றத்தினரால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

விண்ணப்பத்தவர்களிலிருந்து சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற விதத்தில் தகுதியுடையவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு சுயதொழில் திட்டத்தை தாயார் செய்வதற்கான வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கை செவ்வாய்;க்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டு, தொடர்ந்து 8 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

சுய தொழில் திட்டத்தின் அறிமுகம், திட்ட வரைபு, உற்பத்தி, முகாமைத்துவம், நிதித்திட்டம், விற்பனை, சந்தைப்படுத்தல், போன்றவை தொடர்பான கலந்துரையாடல்களும் பயிற்சிகளும் இதன்போது வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கு வங்கிகளில் சுயதொழிலுக்குரிய கடனை பெற்றுக்கொள்ள முடிவதுடன், கடன் பெறுவதற்கான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படும் என கோகுலராஜா மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .