2025 ஜூலை 12, சனிக்கிழமை

இந்திய மீனவர் விவகாரம் : அமைச்சரவை பத்திரம் தாக்கல்

George   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதி கடற்பரப்பில் எமது மீனவர்களின் சொத்துக்களும், கடல்வளமும், வாழ்வாதாரமும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் பொருட்டு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அமைச்சரவைப் பத்திரத்தின் படி, எமது கடற்பரப்பில் மீன்களின் ஆதாரமும் இனபெருக்கத்திற்கான தளமும் அதிகளவில் சேதமாக்கப்பட்டு வருகின்றன என்றும், ஆனாலும், அரசாங்கம் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைக் கைது செய்து வருவதால் இந்த நிலைமை சற்று குறைந்து காணப்பட்டிருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இந்தியப் பிரதமரையும், தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்திக்கச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் தொழில் புரியலாம் என தமிழ்நாட்டில் தெரிவித்திருந்தனர்.

இதனால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டையும் மீறி, மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் அதிகரித்துள்ளது.

அன்றிலிருந்து இந்திய மீன் படகுகள் கூட்டம் கூட்டமாக எமது எல்லைக்குள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழிதிறந்து விட்டிருக்கின்றனர்.

பருத்தித்துறையின் 'முனை' கடற்பரப்பில் ஒரு படையாகத் திரண்டு ஒரே நேரத்தில் 100ற்கும் மேற்பட்ட படகுகள் மூலம் வந்த இந்திய மீனவர்கள் இலங்கை இந்திய அரசுகளால் தடைசெய்யப்பட்ட இரட்டைத் தள  ட்ரோலர் மீன்பிடியில் ஈடுபட்டு எமது மீனவர்களின் வலைகளையும் வளங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.  

இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான 17 மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதன் மொத்தப் பெறுதி 500,000 ரூபாவாகும். இச்சம்பவத்தினால் எமது கடற்றொழிலாளர்கள் மீன் பிடி வலைகள் சேதமாகி விடும் என்ற அச்சத்தினால் இவர்களின் ஊடுருவல் ஏற்படுகின்ற நாட்களில் தொழிலுக்குச் செல்வதை நிறுத்தி விடுவார்கள்.

மேலும், இச் சம்பவங்கள் மற்றும் சேதாரங்கள் குறித்த முறைப்பாடுகளைப் பதிவதற்கு பொலிஸாரும் மறுக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரிய வந்துள்ளது. 

எமது மீனவர்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் இழைக்கப்பட்ட சேதம் மற்றும் தடைசெய்யப்பட்ட இரட்டைத் தள ட்ரோலர் மீன்பிடி முறையினால் எமது கடல் உணவு வளத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அழிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடி மாற்று நடவடிக்கைகளை எடுக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .