2025 ஜூலை 12, சனிக்கிழமை

நெய் விற்றவருக்கு தண்டம்

George   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

காலாவதியான நெய் போத்தல்களை விற்பனை செய்து வந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் இணைப்பாளர் தனசேகரன் வசந்தசேகரம் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

யாழ். நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேற்படி வர்த்தகர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, குறித்த வர்த்தகரை செவ்வாய்க்கிழமை (09) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, நீதவான் தண்டம் விதித்ததாக இணைப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தொண்டைமானாறு செல்வ சந்நிதி ஆலயத்தில் அதிக விலைக்கு குளிர்பானங்கள் விற்ற வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .