2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மூன்று விபத்துக்களில் அறுவர் காயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற விபத்துக்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டைக்காடு, அண்ணமார் கோவிலுக்கு அண்மையில், வீதியின் குறுக்காக ஓடிய சிறுமி மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியதில்  சிறுமி உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த, சுப்பிரமணியம் புஸ்பசீலன் (வயது 33), புஸ்பசீலன் சோபனா (வயது 32), புஸ்பசீலன் ரெஸ்மியஸ் (03), ரவி சஸ்மிகா (வயது 07) ஆகிய நால்வருமே படுகாயமடைந்தனர்.

இதேவேளை, மருதனார்மடம் சந்தியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் உடுவில், அம்பலவாணர் வீதியைச் சேர்ந்த தங்கவேலு  விமலச்சந்திரன் (வயது 47) என்பவர் படுகாயமடைந்தார்.

அத்துடன், மருதனார்மடம், உரும்பிராய் வீதியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட கம்பியொன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை இடித்தத்தில் 28 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .