2025 ஜூலை 12, சனிக்கிழமை

வடமாகாண சபை கட்டிடத்துக்காக நிதி கோரல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, எம்.றொசாந்த்

வடமாகாண சபை கட்டிட தொகுதியில் மேலதிக கட்டிட வேலைகளுக்காக சி.சி.பி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில், முதற்கட்டமாக 40.5 மில்லியன் ரூபாவை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்று வருகின்றது.  இதன்போதே அவைத்தலைவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சி.சி.பி திட்டத்தின் மூலம் வடமாகாண கட்டிட தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில் 49.5 மில்லியன் ரூபாய், நிதி வடமாகாண சபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதிக்கு வழங்குவதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.

மிகுதி நிதியான 40.5 மில்லியன் ரூபாவை வடமாகாண சபை கட்டிடத்தின் மேலதிக வேலைகளுக்காக திறைசேரியில் இருந்து பெற்று தரும்படி மத்திய அரசிடம் இருந்து கோரியுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் செய்த நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர வடமாகாண சபை கட்டிடத்தை பார்வையிட்டார்.

இதன்போது, வடமாகாண சபை கட்டிட தொகுதியை விருத்தி செய்வதற்கு மேலும் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கின்ற பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் கட்டிடங்களை அமைப்பதற்கும் நிதியை அவரிடம் கோரியிருந்தோம். அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக அவர் உறுதியளித்ததாக சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .