2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாண அமைச்சர்- கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை (12) வவுனியாவில் சந்தித்து கலந்துரையாடினார்.

கிராம அபிவிருத்தி சங்கங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுறுத்தும் வகையிலும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தற்போதைய செயற்பாடுகளை மீள் பரிசீலனை செய்யும் முகமாகவும் இச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி திணைக்கள கட்டடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக்கூறியிருந்தனர்.

இந் நிகழ்வில் வட மாகாண கிராம அபிவிருத்தி போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.தியாகராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .