2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சீமெந்து தொழிற்சாலையிலிருந்து இரும்புகள் கடத்தப்படவில்லை: பொலிஸ்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த்

யாழ்., காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்து இரும்புகள் வெட்டப்பட்டு கடத்தப்படவில்லையென யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

மாத தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு, யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரும்பு கடத்துவதாக கூறுவதையடுத்து பொலிஸார் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டதாகவும் இருந்தும் அங்கு இரும்புகள் வெட்டப்பட்டதிற்கான அடையாளங்கள் எவையும் இல்லையென கூறினார்.

மேலும், இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையெனவும் அவர் கூறினார்.

இரும்பு கடத்துவது தொடர்பில் உரிய விபரங்களை பொலிஸாருக்கு தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .