2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

“சி.வி.யை படமெடுப்போரை கைது செய்ய முடியாது”

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை புகைப்படம் எடுப்பவர்களை கைது செய்ய முடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

மாத தொடக்கத்துக்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.

இதன்போது, “வடமாகாண முதலமைச்சர் தன்னை இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படங்கள் எடுத்து பின்தொடர்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

முதலமைச்சரை பலரும் புகைப்படங்கள் எடுப்பார்கள். அவ்வாறு புகைப்படம் எடுப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கமுடியாது.

அத்துடன், முதலமைச்சர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் குறைகள் அல்லது தளர்வு இருப்பதாக உணர்ந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்க முடியும். அதன்போது பொலிஸார் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .