2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எட்டு மாதங்களில் பின்னர் அகப்பட்ட வழிப்பறித் திருடர்கள்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.நகர வீதியில் வைத்து கடந்த ஜனவரி மாதம் வர்த்தகர் ஒருவரின் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த மூவர் எட்டு மாதங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறினார்கள்.

யாழ். முனீஸ்வரர் கோவிலுக்கு முன்னாள் உள்ள வணிக நிலையத்தின் உரிமையாளர் வியாபார நிலையத்தை மூடிவிட்டு வீடு திரும்பும் போது அவரை வழிமறித்த மூவர் அவரை தாக்கி அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்து சென்றனர்.

இது தொடர்பில் உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் மேற்படி நபர்கள் வீதியால் செல்வதை அவதானித்த வணிக நிலைய உரிமையாளர் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை குறித்தெடுத்து கொண்டார்.

தொடர்ந்து, அந்த இலக்கங்களை யாழ்ப்பாண பொலிஸாரிற்கு வழங்கியுள்ளார். இலக்கங்களை வைத்து கொட்டடி பகுதியை சேர்ந்த 20, 24 மற்றும் 25 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .