2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி விவகாரம்: ஒருவருக்கு பிணை, மற்றவருக்கு சிறை

George   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் நாட்டு துப்பாக்கி, இடியன் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

 யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில்  இன்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற   ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

கனகராஜன் குளம் பகுதியில் கட்டுத்துவக்கு வைத்திருந்த நபர் ஒருவர் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதேவேளை, மாங்குளம் அம்பன்குளம் பகுதியில் இடியன் துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .