2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதாரத்தையும் மேம்படுத்த உழைக்க வேண்டும்: டக்ளஸ்

Thipaan   / 2014 செப்டெம்பர் 13 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி முழுமைப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்று (13) இடம்பெற்ற தொகுதி நிர்வாக குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்போர் தமது சுயலாபத்துக்காகவே ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக இன்று பரிணாம வளர்ச்சி கண்டுள்ளோம்.

எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையும், பிரதேசத்தின் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.

அந்தவகையில் எதிர்க்காலத்திலும் கட்சி ஊடான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவும் தயாராகவுள்ளோம்.

அதுமட்டுமன்றி எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் ஊடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களினது அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

வாழ்வின் எழுச்சி திட்டத்தினூடான உதவுக்கரங்கள் கடன்திட்டத்தை எமது மக்கள் பயன்படுத்தி அதனூடாகவும் முழுமையான பயன்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தவகையில், மக்களது வாழ்வாதாரத்தை மட்டுமன்றி பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .