2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நோயாளர் காவுவண்டி மோதி தாயும் மகளும் படுகாயம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். மீசாலை பகுதியில் நோயாளர் காவு வண்டியொன்று சனிக்கிழமை (13) மோதியதில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள்.

மந்துவில் மேற்கை சேர்ந்த யுவதாஸ் நிர்மலா (வயது 40), யுவதாஸ் கஜானா (வயது 08) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

ஏ - 9 வீதியில் துவிச்சக்கரவண்டியால் சென்றுகொண்டிருந்த வேளையில், இவர்கள் மீது நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .