2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாள்வெட்டில் இருவர் காயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியில் திங்கட்கிழமை (15) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவமொன்றில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

வீதியில் நின்றிருந்த இருவரையும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துரத்தி துரத்தி வாளால் வெட்டினர் என்று பொதுமக்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டிற்கு இலக்காகிய ஒருவர், குப்பிளான் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றுபவர் என்றும், காயமடைந்த இருவரும் சுயநினைவை இழந்திருப்பதால் பெயர் விபரங்கள் வைத்தியசாலையில் பதியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெல்லிப்பளை பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .