2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சமாதான நீதவானை கடத்த முயற்சி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவானான சி.சிதம்பரம் (வயது 63) என்பவரை, வானில் வந்த உறவினர் ஒருவர் கடத்த முற்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சமாதான நீதவான் தனது முறைப்பாட்டில், பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது தூரத்து உறவினர்களில் ஒருவரே வானில் ஆட்களுடன் வந்து தன்னை கடத்த முற்பட்டதாக, அவர் தனது பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

ஊர் மக்கள் ஒன்று கூடியதையடுத்து வானில் வந்தவர்கள் தப்பி ஓடியதாக சமாதான நீதவான் தெரிவித்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்ட போது, பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்திலேயே கடத்தல் முயற்சி இடம்பெற்றிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட முனைந்தவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .