2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வான் குடைசாய்ந்ததில் வயோதிபர் இருவர் பலி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, பனிக்கன்குளம் ஏ – 9 வீதியில் ஹயஸ் வான் ஒன்று திங்கட்கிழமை (15) இரவு குடைசாய்ந்ததில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் உடுவிலை சேர்ந்த மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் (வயது 74), செல்லத்துரை செல்வகுமார் (வயது 70) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான், வளைவொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது வானில் பயணித்த மேற்படி இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .