2025 ஜூலை 12, சனிக்கிழமை

பப்பாசி செய்கையாளர்களுக்கான கன்றுகள் வழங்கல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் 80 பப்பாசி செய்கையாளர்களுக்கு தலா 170 பப்பாசி கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் அ.செல்வராசா செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

பப்பாசி கன்றுகள் வழங்குவதற்காக 100 பப்பாசி செய்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 80 பயனாளிகளுக்கான பப்பாசி கன்றுகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பழச்செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் கீழ் இந்த பப்பாசிக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட பப்பாசிக் கன்றுகளை பயிரிடும் நடவடிக்கையை பயனாளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வரட்சியை எதிர்கொள்ளத்தக்க நீர்ப்பாசன முறைகளை (தூவல் நீர்;ப்பாசனம்) பின்பற்றி பயனாளிகள் பப்பாசி பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், மிகுதி 20 பயனாளிகளுக்கான பப்பாசி கன்றுகள் எதிர்வரும் வாரம் தொடக்கம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .