2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஓவிய கண்காட்சி

Gavitha   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


92 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கங்களை உள்ளடக்கிய ஓவிய கண்காட்சி வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(16) ஆரம்பமானது.

இந்த கண்காட்சி தொடர்பில் யாழ். கூட்டுறவு சபை செயலாளர் செ.வேதவல்லி தெரிவிக்கையில்,

யாழ். கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தால் யாழ். மாவட்டத்தில் உள்ள 82 பாடசாலை மாணவர்களிடையே 6 பிரிவுகளாக ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

ஜூலை 15ஆம் திகதி தொடக்கம் ஜூலை 30ஆம் திகதி வரை இந்த போட்டி இடம்பெற்றது. இதில் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 650 ஓவியங்கள் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வருகின்ற 20ஆம் திகதி நடைபெறவுள்ள 92ஆவது கூட்டுறவு தின விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஓவியங்களுக்கான பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் இக் கண்காட்சி இன்றும் நாளையும் காலை 10 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.

யாழ். கூட்டுறவு சபை தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், கூட்டுறவு அமைச்சின் ஆணையாளர் வ.மதுமதி, கூட்டுறவு அமைச்சின் உதவி ஆணையாளர் அருந்தவனாதன், யாழ். வலய உதவிக்கல்வி பணிப்பாளர் (அழகியல்) க.ஜெயபாலசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .