2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கணவனுக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் விளக்கமறியல்

Thipaan   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் மற்றும் கணவரது இரண்டாவது மனைவி ஆகியோரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், செவ்வாய்கிழமை (16) உத்தரவிட்டார்.

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மகேந்திரன் ஜெயகௌரி (வயது 36) என்ற 4 பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஆகியோரை செவ்வாய்க்கிழமை(16) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போதே நீதவான் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேற்படி சந்தேகநபர், சாவகச்சேரி பகுதியிலுள்ள உணவகங்களுக்கு உழுந்து வடை உற்பத்தி செய்து வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .