2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் இராணுவ வீர, வீராங்கனைகள் 500பேர் பயிற்சி நிறைவு

Thipaan   / 2014 செப்டெம்பர் 20 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா


யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்;ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய படையணி, பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது.

வலி. வடக்கு காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் இந்த படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.
100 பெண்களும், 400 ஆண்களுமாக 500 பேரைக்கொண்டமைந்த இந்த படையணி, பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது.

பயிற்சிகளை முடித்தவர்கள் இராணுவத்தின் பெண்கள் படையணி, பொறியியல் படை அணி மற்றும் பொது படையணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளியேறிய படையணியின்  அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படை தலையைகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல, யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி  மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .