2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளாலியில் தொடர்ந்து ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

யாழ்ப்பாணம், கிளாலி, முதலியார் தோட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தொடர்ந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிணற்றில் இருந்து கடந்த வியாழக்கிழமை (18) 60 மில்லிமீற்றர் ரக ஷெல் 16, 81 மில்லிமீற்றர் ரக ஷெல் 4, ஆர்.பி.ஜி குண்டு 1 ஆகியன மீட்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை (19) 60 மில்லிமீற்றர் ரக ஷெல் 86, 81 மில்லிமீற்றர் ரக ஷெல் 14, கிளைமோர் 01, மற்றும் ஆர்.பி.ஜி குண்டு 1 ஆகியன மீட்கப்பட்டன.

தொடர்ந்து சனிக்கிழமை (20) 60 மில்லிமீற்றர் ரக ஷெல் 07, 81 மில்லிமீற்றர் ரக ஷெல் 02, கைக்குண்டு 01 ஆகியனவும் மீட்கப்பட்டன.

கிணற்றை துப்பரவு செய்யும் போது, ஆயுதங்கள் இருப்பது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிணங்க இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

கிணறு முழுமையாக தூர்வாரப்பட்டு இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .