2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் சமாதான ஊர்வலம்

George   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


உலக சமாதான தினத்தையொட்டி, பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்ப்பாட்டில் சமாதான ஊர்வலம் ஒன்று யாழில், ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

உலக சமாதான தினம் இன்று(21) உலகம் பூராகவும் கொண்டாடப்படும் நிலையில் அதனை அனுஷ்டிக்கும் வகையில் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். நூலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்வலமானது யாழ். துரையப்பா விளையாட்டரங்கை சென்றடைந்ததுடன் ஊர்வலத்தை யாழ். மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர் உதய பெரேரா ஆரம்பித்து வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் மும்மத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், யாழ். மாவட்டத்திலுள்ள முப்படையினர், முச்சக்கர வண்டி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .