2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நியதிச்சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பெருவெற்றி: சிவஞானம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட  நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென வடமாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

வடமாகாண சபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.

இதுவரையில் எம்மால் மக்களுக்கு செய்ய முடிந்த விடயங்களை செய்துள்ளோம் என்ற ஆத்மதிருப்தி எமக்கு ஏற்பட்டுள்ளது. முழுமையாக செய்யக்கூடிய புறச்சூழல் அமையவில்லை. இன்னும் நிறையவே செய்திருக்கலாம் என்ற ஆதங்கமும் எம்மிடம் உள்ளது.

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச்சட்டங்கள் நாம் போராடி பெற்றது. எமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.

நாம் அரசோடு சாராத கட்சி என்பதால் எல்லாவற்றையும் செய்யமுடியவில்லை. அதற்காக நாம் இதுவரையில் எதையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த நியதிச்சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை எமக்கு கிடைத்த பெரு வெற்றி.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணமாக அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்தல் 1988ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தப்பட்டு இரு வருடங்களில் மாகாண சபை கலைக்கப்பட்டது.

இதன் பின்னர் 2006ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்ற தீர்ப்பினூடாக பிரிக்கப்பட்டன.  2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேசத்தின் தொடர்சியான அழுத்தங்களால் 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .