2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நலன்புரி முகாம் மக்களுக்கு அரிசி மூடைகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள 50 குடும்பங்களுக்கு 10 கிலோ எடையுள்ள தலா ஒவ்வொரு அரிசிப் பைகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திங்கட்கிழமை (22) வழங்கினார்.

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சபாபதிப்பிள்ளை நலன்புரி வசிக்கும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கே முதலமைச்சர் இந்த அரிசி பைகளை வழங்கினார்.

முகாமிலுள்ள குடும்பங்களின் வாழ்வாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இந்த அரிசி பைகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .