2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணி சுவீகரிப்பிற்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

George   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள 40 ஏக்கர் காணி, இராணுவத்தினரின் தேவைக்கு சுவீகரிக்கும் நோக்கில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நிலஅளவை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முல்லைத்தீவிலுள்ள காணிகளின் சுவீகரிப்பிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று திங்கட்கிழமை(22) புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஒரு மைல் தூரத்திலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'இராணுவமே வெளியேறு', 'அபிவிருத்தி இருக்கட்டும் எங்கள் அப்பா எங்கே? எங்கள் உறவுகள் எங்கே?' ,'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்', 'ஐ.நாவே திரும்பிப்பார்', 'சர்வதேச விசாரணையில் முள்ளிவாய்க்கால் படுகொலை விசாரணை வேண்டும்'  என பல கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு வழங்கும்படி கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான மேரி கமலா குணசீலன், எம்.கே.சிவாஜிலிங்கம், சிவப்பிரகாசம் சிவமோகன், உள்ளிட்டவர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்காலில் 614 ஏக்கர் காணிகள் கடற்படை முகாம் அமைப்பதற்கு சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை செவ்வாய்க்கிழமை(23) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .