2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மாட்டிறைச்சி கொண்டு சென்றவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

அனுமதிப்பத்திரமின்றி 51 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு சென்ற நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் செவ்வாய்க்கிழமை (23) தீர்ப்பளித்தார்.

அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை (23) காலையில் மாட்டிறைச்சி கொண்டு செல்லும் போது மேற்படி நபரை நெல்லியடி பொலிஸார் கைது செய்தனர்.

கரவெட்டி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கால்வாய் நோய் தாக்கத்தால் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்பட்ட நிலையில், மேற்படி நபர் கொண்டு சென்ற மாட்டிறைச்சி கால்வாய் நோய்த்தாக்கம் இருக்கின்றதா என்பது தொடர்பான சோதனை செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த மாட்டிறைச்சி கால்வாய் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை கண்டறிப்பட்டது.

இதனையடுத்து, மேற்படி நபர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் அபராதம் விதித்ததுடன், நபரிடம் இருந்து மீட்கப்பட்ட மாட்டிறைச்சியை அழிக்கும்படியும் நெல்லியடி பொலிஸாரிற்கு உத்தரவிட்டார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .