2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இஞ்சி செய்கைக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 04:19 - 1     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.மாவட்டத்தில் இஞ்சி செய்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் புதன்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் இஞ்சி செய்கை மேற்கொள்வதற்கான வளம் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இஞ்சி செய்கை மேற்கொள்வது தொடர்பில் கொழும்பிலிருந்து குழுவொன்று எதிர்வரும் வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, யாழ்;ப்பாணத்திலுள்ள இஞ்சி தேவையின் அளவு மற்றும் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் இஞ்சிக்கு வெளியிடங்களிலுள்ள கேள்வி தொடர்பிலும் ஆராயவுள்ளது.

இதன்மூலம், எவ்வளவு உற்பத்தி செய்யவேண்டும் என்பது தொடர்பான தீர்மானத்தை அக்குழு மேற்கொள்ளும்.

இதனை தொடர்;ந்து இஞ்சி செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மேற்படி ஆய்வுகள் செய்யப்பட்டு பயிர்ச்செய்கை செய்வதன் மூலம் இஞ்சி வீண்விரயமாவதை தவிர்க்க முடிகின்றது. 

ஏனெனில், 1998 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்படாமல் மேற்கொள்ளப்பட்ட செய்கையால் இஞ்சி அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வீண் விரயத்தால் நட்டங்கள் ஏற்பட்டிருந்ததான' என  அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 1

  • கோபால் s Sunday, 28 July 2019 03:32 PM

    ஐயா இஞ்சி வளர்ப்பு பற்றி ஒரு வீடியோ வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .