2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் வீடுகள் திருத்துவதற்கு நிதி கையளிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரண்டு மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை திருத்தி அமைப்பதற்கான நிதியை அனுப்பி வைத்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் பிரதி பணிப்பாளர் லக்ஸ்மன் பெர்னாந்து புதன்கிழமை (24) தெரிவித்தார்.

வீடுகளை திருத்தி அமைக்கும் பொருட்டு தலா 65 ஆயிரம் ரூபா வீதம் இருவருக்கும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வறுமை கோட்டின் கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளை திருத்தி அமைப்பதற்கு நிதி வழங்கப்படும் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .