2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ். பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பிறிதொரு திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அத்தினத்தில் நடைபெறாது எனவும், பிறிதொரு தினத்திலேயே பட்டமளிப்பு விழா நடைபெறும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

இது தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளரை தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'தவிர்க்க முடியாத காரணங்களால் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. பிற்போடப்பட்டமைக்கான காரணங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது' என கூறினார்.

அத்துடன், பட்டமளிப்பு விழா நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .