2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆனையிறவு உப்பள வயல் வரம்புகளை புனரமைக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனையிறவு உப்பளத்தின் உப்பு வயல்களுக்கான வரம்புகளை புனரமைப்பது மற்றும் புதிதாக அமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

ஆனையிறவு உப்பளத்தில் மேற்படி சந்திப்பு இன்றைய தினம் (23) இடம்பெற்றது.
இதன்போது கடந்த யுத்தம் காரணமாக உப்பு வயல்களிலிருந்த வரம்புகள் புதிதாக சேதமடைந்திருந்த நிலையில் அவற்றை மீள்புனரமைப்பு செய்வதுடன் புதிதாக வரம்புகளை அமைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் உப்பு உற்பத்தி தொழிற்துறை நடவடிக்கைகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மற்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதனிடையே ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் உட்கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் உள்ளுரிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு கட்டம் கட்டமாக பணிகளை முன்னெடுக்குமாறு  பணிப்புரை விடுத்த அமைச்சர், அங்குள்ள உள்ளக வேலைத்திட்டங்களுக்காக உடனடியாக 10 பேரை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவனுக்கு தொலைபேசி ஊடாக பணிப்புரை வழங்கினார்.

அங்கு சேதமடைந்து காணப்படும் கட்டிடங்கள் திணைக்களத்தின் ஊடாக புனரமைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் மற்றும் பொறியியலாளர்களான அருளானந்தன், பவானந்தன், உமாபதி ஆகியோரும் உடனிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .