2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்திய டிப்பர் வாகன சாரதிகள் கைது

Thipaan   / 2014 செப்டெம்பர் 25 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

முல்லைத்தீவு பகுதியில் மண் அள்ளுவதற்கு வழங்கிய அனுமதிப்பத்திரத்தை வைத்து, விடத்தல்பளை பகுதியில் மண் அகழ்ந்து யாழ்ப்பாணம் கொண்டு சென்ற நான்கு டிப்பர் சாரதிகளை வியாழக்;கிழமை (25) காலை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

பளை பகுதியிலிருந்து மண்ணுடன் யாழ்ப்பாணம் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்கள் மிருசுவில் பகுதியில் வைத்து சோதனை செய்யப்பட்டன.
இதன்போது, முல்லைத்தீவு பகுதியில் மண் அள்ளுவதற்கு வழங்கிய அனுமதிப்பத்திரத்தை வைத்து விடத்தல் பளை பகுதியில் மண் அகழ்ந்து கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, ஐந்து டிப்பர் வாகன சாரதிகளில் ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.

இதனையடுத்து, 4 டிப்பர் வாகன சாரதிகளை கைது செய்ததுடன், ஐந்து டிப்பர் வாகனங்களையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .