2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிடியாணையை இடைநிறுத்தம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சிலிங்கோ புரொபிட் ஸியாரிங் கம்பனியின் தலைவரான லலித் ஜோன் கொத்லாவலைக்கு எதிராக அக்ரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினையடுத்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முகம்மது பஸீலினால் நேற்று புதன்கிழமை(24) பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை நேற்று வியாழக்கிழமை(25) இடைநிறுத்தி தீர்ப்பளித்தார்.

மேற்படி நபருக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் பிரகாரம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததனால் அக்கரைப்பற்று நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பிடடிருந்தது.

இந்த நபர் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (25)ஆஜரான சட்டத்தரணி குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் வெளிப்பிரதேசங்ளுக்கு செல்லக் கூடாது என்ற கொழும்பு சுப்ரீம் கோட்டின் தடை உத்தரவின் படி  தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியதன் காரணமாக இவருக்கான பிடியாணைiயை இடைநிறுத்தி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று (25) தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .