2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மின்ஒழுக்கில் இளைஞன் படுகாயம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

யாழ். திருநெல்வேலி  பாடசாலை வீதியிலுள்ள சந்தைக் கட்டடத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கினால், அங்கு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் படுகாயமுற்ற நிலையில் யாழ்.  போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சுதந்திரபுரம் வசாவிளான் பகுதியை சேர்ந்த ராகவன் ரஞ்சித்குமார் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

குறித்த கட்டடம் நல்லூர் பிதேச சபைக்கு சொந்தமானது என்பதோடு முன்னரும் இவ்வாறான சம்பவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .