2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் கலந்துரையாடல்

George   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தின் அரச அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை(26) இடம்பெற்றுள்ளது.

ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி; கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் சந்திரிசிறி, வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் படைத்துறை அதிகாரிகள் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .