2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

மல்லாவியில் கன்டர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், மல்லாவி அணிஞ்சியன் குளம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தம்புராசா உதயராசா (வயது 35) என்பவர் சனிக்கிழமை (27) இரவு உயிரிழந்ததாக மல்லாவி பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தனர்.

மல்லாவி சந்தியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலுள்ள மதுபானக் கடையிலிருந்து, வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, அவ்வீதியால் வந்த கன்டர் ரக வாகனம், அவரை மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

அத்துடன் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .