2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியரின் வங்கிக்கணக்கில் திருட்டு

Gavitha   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்     

யாழ். வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது என்று சனிக்கிழமை (27) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தனர்.

வைத்தியர் தனது வங்கிக் கணக்கு புத்தகத்தை பரிசீலித்து பார்த்த போது, தனது கணக்கில் இருந்து 25,000 ரூபாய் திருடப்பட்டுள்ளமையை  உள்ளதை அவதானித்துள்ளார்.

அதனை அவ்வங்கி முகாமையாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதன்பின்னர் வங்கியினால் மேற்கொண்ட சோதனையின் போது, நெல்லியடியில் உள்ள வங்கியில் இருந்து 20,000 ரூபாய், 5000 ரூபாய் என இரண்டு முறை மீளப்பெறப்பட்டுள்ளது என குறித்த வங்கியின் ஏ.ரி.எம் இயந்தி அறையிலுள்ள சி.சி.டி.வி கமெரா மூலம் தெரியவந்ததுடன், பதிவாகிய சந்தேக நபரையும் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளர் என தெரியவந்ததையடுத்து, அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறை  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .