2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவர் கைது

Thipaan   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பழை பண்ணாகம் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவரை திங்கட்கிழமை (29) இரவு கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார சபையினரும் தெல்லிப்பளை பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையிலேயே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, தென்மராட்சி கப்பூது பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மண் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் கொண்டு சென்ற சந்தேகநபரை புத்தூர் சந்தியில் வைத்து செவ்வாய்க்கிழமை (30) காலை கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் கூறினார்கள்.

புத்தூர் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், உழவுஇயந்திரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .