2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இளவாலையில் கடை உடைத்து திருட்டு

Thipaan   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

 இளவாலையில் அமைந்துள்ள இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை, திங்கட்கிழமை (29) இரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான, பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தனர்.

கடையின் கூரையை உடைத்து உள்நுழைந்து 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் 50 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.

மேற்படி கடைக்கு அருகிலுள்ள கடையும் உடைக்கப்பட்டுள்ள போதும், அங்கு எவ்வித பொருட்களும் திருடப்படவில்லையென பொலிஸார் கூறினார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .