2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஷெல் வெற்றுக்கோதுகளை கடத்தியவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்திலிருந்து மாகோவிற்கு ஷெல்களின் வெற்றுக்கோதுகளை பட்டா ரக வாகனத்தில் கடத்தி சென்ற இருவரை மிருசுவில் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் கூறினார்கள்.

அவர்களிடமிருந்து 5 ந்ஷல்களின் கோதுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

இரும்பு கொண்டு செல்வதாகக்கூறி அதனுள் மறைத்து ஷெல் கோதுகளை கொண்டு செல்லும் போது, மிருசுவில் பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் கூறினார்கள்.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .