2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாள் வெட்டு: இளைஞன் கைது

Kogilavani   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ்ப்பாணம், கலிகை பகுதியில் இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டதாக கூறப்படும் 18 வயது இளைஞனை புதன்கிழமை(1) கைதுசெயத்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டில் காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மேற்படி பகுதியிலுள்ள ஆலயமொன்றில் செவ்வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற பூசையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதம் வழங்குவது தொடர்பில் இரு தரப்பினர்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதன்போது மேற்படி  இளைஞன் ஒருவர் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில், படுகாயமடைந்த இராசையா செல்வகுலசிங்கம் (வயது 49), கேசவன் நாகேந்திரன் (வயது 44) ஆகிய இருவரும் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் துன்னாலையை சேர்ந்த 18 வயது இளைஞனை புதன்கிழமை (01) மாலை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் துன்னாலையை சேர்ந்த 18 வயது இளைஞனை புதன்கிழமை (01) மாலை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .