2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாள்வெட்டுடன் தொடர்புடைய எண்மர் கைது

Thipaan   / 2014 ஒக்டோபர் 02 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். கைதடி சந்தியில் கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதடியிலுள்ள வாசிகசாலை ஒன்றின் முன்னால் நின்றிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

இதில் சிறுகாயங்களுக்குள்ளாகிய நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட இருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் என எண்மர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை கைது செய்வதற்கு அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரும் உதவி புரிந்ததாகவும் எட்டு சந்தேகநபர்களையும் வெள்ளிக்கிழமை (03) சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .