2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மதுபானம் விற்ற பெண்ணுக்கு விளக்கமறியல்

Thipaan   / 2014 ஒக்டோபர் 02 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மிருசுவில் பகுதியில் அனுமதியின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வியாழக்கிழமை (02) உத்தரவிட்டார்.

மேற்குறித்த பெண் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துகொண்டிருக்கும் போது, கொடிகாமம் பொலிஸாரால் வியாழக்கிழமை (01) கைது செய்யப்பட்டார்.

மேற்படி பெண்ணிடமிருந்து 175 மில்லிலீற்றர் மதுபான போத்தல்கள் 13 கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .