2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தமிழ் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர், நல்லூர் ஆலயத்திற்கு பின்வீதியிலுள்ள மடத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (03) முதல் ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக்கோரி கடந்த செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி யாழ்.செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தி, ஜனாதிபதிக்கு யாழ்.மாவட்ட செயலாளர் ஊடாக மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்தோம். ஆனால் இந்த நிமிடம் வரை அதற்கான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் 12, 13 திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், எமது எதிர்ப்பை காட்டும் வகையிலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

அத்துடன், உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை 10 மணி தொடக்கம்  ஞாயிற்றுக்கிழமை (05) 5 மணி வரை இரவு பகலாக மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .