2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மு.த.தே.க செயலாளர் விஜயகாந் உட்பட மூவர் கைது

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 03 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் உட்பட உண்ணாவிரதமிருந்தவர்களில் மூவரை பொலிஸார் சற்றுமுன்னர் கைது செய்துள்ளனர்.

நல்லூர் ஆலயத்திற்கு பின்வீதியிலுள்ள மடத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (03) முதல், விஜயகாந் தலைமையிலான குழுவினர் உண்ணா விரதப்போராட்டத்தில் குதித்திருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வழிசமைக்குமாறு எதிர்வரும் 12, 13 திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவிருக்கும்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தமது எதிர்ப்பை காட்டும் வகையிலும் இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை 10 மணி ஆரம்பமானதுடன் ஞாயிற்றுக்கிழமை (05) 5 மணி வரை இரவு பகலாக மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவ்வமைப்பு அறிவித்திருந்தது.

உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்ட மேடைக்கு, அருகிலிருந்த வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றனர் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த மூவரையும் தாம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமன்றி உண்ணாவிரத மேடையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி சாதனங்களையும் பொலிஸார் எடுத்துசென்றுள்ளனர்.

இதேவேளை, காலையிலிருந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்திருந்தோர், தங்களுடைய உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .