2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போலி தங்கம் விற்க முயன்ற நால்வர் யாழில் கைது

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நாவற்குழி பிரதேசத்தில் மக்களை ஏமாற்றி போலி தங்கத்தை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்தே அந்த நால்வரையும் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவர்களிடமிருந்து கப் ரக வாகனம், பித்தளை செம்பு ஒன்று, இரண்டு கிலோ 800 கிராம் நிறையில் போலியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்த தங்க பொத்தான்கள்  மற்றும் 3 கிலோ 230 கிராம் நிறைகொணட் ஈயம் உருண்டைகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .