2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குடிநீர் தாங்கிகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை

George   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய் கலந்துள்ள கிணறுகள் உள்ள பிரதேச மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு இன்னமும் 20 நீர்த்தாங்கிகள் தேவைபடுவதாக வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ், ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தார்.

சுன்னாகம் மின்சார சபை வளாகத்தில் நிலத்தில் ஊற்றப்பட்ட கழிவு எண்ணெய், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிணறுகளின் நீரில் கலந்தன. இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் குடிநீருக்காக தங்கள் கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், மேற்படி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடுவில் பிரதேச சபை ஆரம்பித்தது.

10 நீர்த்தாங்கிகள் பிரதேச சபையால் கொள்வனவு செய்யப்பட்டும், 3 நீர்த்தாங்கிகள் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரிடம் இருந்து பெறப்பட்டும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் தேவைப்படுவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் மேலும் குடிநீர் தாங்கிகள் அப்பகுதியில் வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கோரிக்கை முன்வைத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இருந்தும், அது தொடர்பில் எவ்வித பதில்களும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் மிகுதி நீர்த்தாங்கிகளையும் பிரதேச சபையின் நிதியில் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .