2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

George   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி வட்டக்கச்சி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர்  சனிக்கிழமை(04) மாலை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர்.

இராமநாதபுரம் புதுக்காடு பகுதியை சேர்ந்த கருணாநிதி கோகுலகீதன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு, நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற வேளையிலேயே மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு, பிரதேச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி மாணவன் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்று வந்தவர் ஆவார்.

இதேவேளை, கிளிநொச்சி கந்தன் குளத்தில் நீரில் மூழ்கி கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி மூன்று சிறுமிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .