2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அமைச்சர் டக்ளஸ் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்: யோகேஸ்வரி பற்குணராசா

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன்  கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதனூடாக பலன்களை பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்' என யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 '1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஐந்து சபைகளையும் கொண்டமைந்துள்ளது. அந்த ஸ்தாபனத்திற்கு ஊடாக உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எமது நாட்டிலும் அதனூடான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் மக்களின் நிழல் (ஜனசெவன) என்ற திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் தேசிய வீடமைப்பு மற்றும் குடியிருப்பு நடவடிக்கைக்கு அமைவாக காசோலைகள் மற்றும் காணிகளுக்கான உறுதிகளை வழங்கும் நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களுக்காகவும் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி கலந்துரையாடுவதன் பயனாக பல அபிவிருத்திகள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  

'உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு நாடளாவிய ரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அதனடிப்படையில்தான் அரச உத்தியோகத்தர்களுக்கான கடன்திட்டம், வீட்டு உரிமைப்பத்திரங்களும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறான உதவித்திட்டங்கள் ஊடாக பயனாளிகள் உரிய பயன்களைப் பெற்று முன்னேற்றம் காண வேண்டும்' என  தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .