2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ். இளைஞன், இறம்பொடையில் மரணம்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24 வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற இளைஞன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11.10க்கு இடம்பெற்றுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் இரசாயன ஆய்வு கூட பரிசோதகராக கடமையாற்றும்  இவர், யாழ்ப்பாணத்திலுள்ள சிலருடன் இறம்பொடைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய சடலம், கொத்மலை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

(படங்கள்: பாலகிருஷ்ணன் திருஞானம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .